கடற்படையின் சிறப்பு நடமாடும் பல் மருத்துவ சிகிச்சை தொடர்கள்

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக, யாழ்ப்பாண மாவட்டத்தை உள்ளடக்கிய சிறப்பு நடமாடும் பல் மருத்துவ சிகிச்சை தொடர்களானது 2025 ஆகஸ்ட் 21 முதல் 25 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் காரியாலயத்துடன் இணைந்து கடற்படை பல் மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்த இந்தப் பல் மருத்துவ சிகிச்சைகளானது காரைநகர்ஜெ/வியவில் சைவக் வித்தியாலயம், காரைநகர் பொன்னாலை கிராமம், காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் கிராமம் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்களான வேலுசுமண மற்றும் வெத்தலக்கேணி கடற்படை நிறுவல்களில் நடைபெற்றது.

மேலும், இந்த பல் மருத்துவ சிகிச்சைகளில் பங்கேற்ற கடற்படை வீரர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் இலவச பல் சுகாதார சேவைகளைப் பெறும் வாய்ப்பைப் பெற்றனர், மேலும் சமூகத்திற்கு முறையான வாய்வழி சுகாதார நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.