இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் பைன் (David Pine) அவர்கள் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக இன்று (2025 ஆகஸ்ட் 12) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலை வராகவும் அக் கட்டளையின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றும் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான கௌரவ நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மற்றும் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.