பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரியை ஒரு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட "சிரம மெஹேயும" திட்டத்தின் கீழ், பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தை மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 06 வரை மேற்கொள்ளப்பட்டது.
"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை, தேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு சமூக சேவை பங்களிப்புகளை வழங்குகிறது.
அதன்படி, தீவு முழுவதும் பரந்து விரிந்துள்ள தொழிற்கல்வி நிறுவனங்களை கவர்ச்சிகரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழல்களாக மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட "சிரம மெஹேயும" திட்டத்தின் கீழ் பாததும்பர தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு வழங்கப்பட்டது.
மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஷில்ப நிறுவனம், பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் விரிவுரை அரங்குகள் மற்றும் கட்டிடங்களின் புதுப்பித்தல் மற்றும் நிறப்பூச்சி தீட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதன் சமூக சேவை பங்களிப்பை வழங்கியது.