திருகோணமலை சிறப்பு கைவினைப் படைத் தலைமையகத்தில் சமச்சீரற்ற போர் தந்திரோபாயங்கள் குறித்த பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை சிறப்பு கப்பல் படை தலைமையகத்தில் சமச்சீரற்ற போர் தந்திரோபாய பயிற்சி பாடநெறி நடத்தப்பட்ட (ASYMMETRIC WARFARE COURSE-2025) சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சின்னம் அணிவிக்கும் விழா 2025 ஜூலை 12 ஆம் திகதி தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் இது வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த 10 வார பயிற்சி பாடநெறியில் சீன மக்கள் குடியரசு, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தி மூன்று (23) பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். குறித்த பாடநெறி சமச்சீரற்ற கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான பல தத்துவார்த்த மற்றும் நடைமுறை செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
குறித்த பாடநெறியை நடத்துவது, சிறப்பு நடவடிக்கைப் பயிற்சிக்கான பிராந்திய மையமாக இலங்கை கடற்படையின் பங்கை மேலும் வலுப்படுத்தியதுடன், கடல்சார் பாதுகாப்பிற்கு உறுதியளித்த இணைப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பும் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் சிறப்பு கைவினைப் படை தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.