கடற்படை தலைமையகத்தில் தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

கடற்படை விளையாட்டு அணிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு பட்டறை 2025 ஜூலை 01 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக கேட்போர் கூடத்தில் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் மற்றும் தூய்மையான விளையாட்டு கல்வியாளர் ஊட்டச்சத்து பிரிவின் வளங்களுடன் நடைபெற்றது.

அதன்படி, 'தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளின் பயன்பாட்டிலிருந்து விடுபட்ட சரியான ஊட்டச்சத்து முறைகள் மூலம் இலங்கை கடற்படைக்குள் ஒரு ஆரோக்கியமான விளையாட்டு சூழலை உருவாக்குதல்' என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்தப் பட்டறையில், ஊக்க மருந்துகளை கட்டுப்படுத்தல், சட்டங்கள் மற்றும் மீறல்கள், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அவற்றின் தடுப்பு, மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளின் சரியான பயன்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் சரியான ஊட்டச்சத்தைப் பெறுவதற்கான நடைமுறை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சி ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் உதவி இயக்குநர் திரு. சமத் கிரீனிக, விளையாட்டு கல்வியாளர் ஊட்டச்சத்து பிரிவின் திரு. பிபிஏவி படவல மற்றும் திருமதி. எம்விஏஎம் நிமேஷா ஆகியோரின் வளங்களின் பங்களிப்புகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேவைகள் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, கடற்படை விளையாட்டு இயக்குநர், கொமடோர் மங்கள மும்முல்லகே, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.