இராணுவத் தளபதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பும் இடம்பெற்றது.

அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைத்தந்த இராணுவத் தளபதியிற்கு இலங்கை கடற்படையின் உயரிய மரியாதையுடன் கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்ற பின்னர், கடற்படைத் தளபதி கடற்படையின் பிரதிப் பிரதானி உள்ளிட்ட கடற்படை முகாமைத்துவ சபையை இராணுவத் தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.

இராணுவ மரபுகளின்படி நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதிகளிடையே சுமுகமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சகோதரப் படைகளுக்கு இடையிலான பிணைப்பு, கௌரவமான ஒற்றுமை மற்றும் சேவை ஒத்துழைப்பை வலுப்படுத்திய இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.