கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
‘நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை பிரதேச செயலகத்தில், 571- நுவரவெவ, ஸ்ரீ சத்தர்மவன்ச விவேகாஸ்ரம விஹாரய வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு மையம் (01), 2025 ஜூலை 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
மேலும், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படை 1113 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு சுமார் 10,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இவ்வாறு பொதுமக்களுக்குத் கையளிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் 571 - நுவரவெவ ஸ்ரீ சத்தர்மவன்ச விவேகாஸ்ரம விகாரையைச் சுற்றியுள்ள ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.