நிகழ்வு-செய்தி

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 03 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்டத்தின் தலாவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள எதகல, கல்வடுவாகம மற்றும் யாய 2 மேல் பகுதி ஆகிய கிராமங்களில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைக் கலை உதவியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு (03) நிலையங்கள் 2025 ஜூன் 26 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

27 Jun 2025

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூன் 25 அன்று சந்தித்தார்.

27 Jun 2025

கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை 2025 ஜூன் 20 முதல் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியதுடன், இதனைத் தொடர்ந்து, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையில் குமன தேசிய பூங்காவில் ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை கடற்படையினர் 2025 ஜூன் 25 அன்று தொடங்கினர்.

27 Jun 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாலிகாத்தென்ன கல்லூரியில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களுக்காக கையளிக்கப்படும் நிகழ்வானது, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் மற்றும் கம்மெந்த சமூக சேவை திட்டத்தின் கீழ், பொரளையைச் சேர்ந்த எம்.பி. அமரசிங்கவின் நிதி பங்களிப்புடன், 2025 ஜூன் 20 ஆம் திகதி நடைபெற்றது.

27 Jun 2025