கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 20 முதல் 22 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அங்கு கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்த்துடன் அந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார். மேலும், கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கடற்படையின் பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து விளக்கினார்.