நிகழ்வு-செய்தி
கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சியை முடித்த தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 32 மாலுமிகள் பிரியாவிடைப் பெற்றுச் சென்றனர்
           வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் 22 வது தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்த முப்பத்திரண்டு (32) தொழில்நுட்ப மாலுமிகளின் பிரியாவிடை நிகழ்வு 2025 ஜூன் 20 ஆம் திகதி வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில், நிறுவனத்தின் ஆய்வுகள் இயக்குநர் கெப்டன் ஹேமஜித் பண்டாரவின் அழைப்பின் பேரில், கடற்படை பொறியியல் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
21 Jun 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
           கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் தபுத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெல்ஹிரியாவ மற்றும் கோன் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
21 Jun 2025
கடலில் எண்ணெய் கசிவை நிர்வகிப்பது குறித்த கூட்டுப் பயிற்சி காங்கேசன்துறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
           இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் வலயத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக பதிலளிப்புக்கான தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் கடல் வலயத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஏற்பாடு செய்த கூட்டுப் பயிற்சி, 2025 ஜூன் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் காங்கேசன்துறை துறைமுகத்தின் 'PH' இறங்குத்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Jun 2025
கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்
           அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 11 முதல் 18 வரை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் கஞ்சதேவ மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் கோதைம்பரவில் இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Jun 2025
வடமேற்கு கடற்படை கட்டளையில் கடற்படையினரிற்க்கும் பொதுமக்களிற்கும் விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சைகள்
           இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் மருத்துவ சிகிச்சைகள் 2025 ஜூன் 03 முதல் 07 வரை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள மஹாவ, கும்புக்கெட்டே, முந்தலம், கொட்டுகச்சிய மற்றும் கங்கே வாடய ஆகிய பகுதிகளை உள்ளடக்கியவாறு நடைப்பெற்றது.
21 Jun 2025


