நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படைத் தளபதி இந்தோ-பசிபிக் கடல்சார் பாதுகாப்பு குறித்து 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்
           அமெரிக்க கடற்படையின் பசிபிக் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி அட்மிரல் ST Koehler நடத்திய 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாடு (12th Multilateral Maritime Virtual Key Leadership Engagement) 2025 ஜூன் 18 அன்று ஹவாயிலிருந்து நிகழ்நிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்திலிருந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மாநாட்டில் பங்கேற்றார்.
19 Jun 2025
துருக்கிய குடியரசு கடற்படையின் 'TCG BÜYÜKADA' தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது
           உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த துருக்கியக் கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியின் பிறகு 2025 ஜூன் 18 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.
19 Jun 2025


