துருக்கிய குடியரசு கடற்படையின் 'TCG BÜYÜKADA' தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த துருக்கியக் கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியின் பிறகு இன்று (2025 ஜூன் 18) தீவை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டு கடற்படைப் (PASSEX) பயிற்சியின் போது, கப்பல்களுக்கு இடையே அமைப்புகள் ரீதியாகப் பயணம் செய்தல் மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் கப்பல்களுக்கு இடையேயான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்குப் பிறகு கூட்டுப் பயிற்சி முடிவுக்கு வந்தது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதர் கௌரவ Semih Lütfü Turgut மற்றும் ‘TCG BÜYÜKADA’ கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் Anil BİLGİN ஆகியோர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகோடாவை 2025 ஜூன் 13 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர். அங்கு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

‘TCG BÜYÜKADA’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் வெலிசர கடற்படை தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டியிலும் தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிடவும் கப்பல் பணியாளர்கள் பங்கேற்றனர். இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், இதுபோன்ற அதிகாரப்பூர்வ பயணங்கள் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே புதிய அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் மேம்படுத்தப்படும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மை ஆகியவை கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிப்பதில் பெரிதும் பங்களிக்கும்.