'முழுநிறைவான வாழ்க்கை - வசதியான நாடு' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல் மற்றும் கடலோர வலயத்தின் நிலையான இருப்புக்கு உறுதியளித்துள்ள கடற்படை, 'நிலைபேறான உயிர்சார் உலகம் – என்னும் பசுமையான வாழ்க்கை' என்ற கருத்தை யதார்த்தமாக்குவதற்காக, ஜூன் 05 உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு 2025 ஜூன் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடற்படையானது சமூக சேவையையில் ஈடுபட்டது.