சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை கூட்டம் மற்றும் மாநாடு கொழும்பில் தொடங்கியது
இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் ஏற்பாட்டில், சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இன்று (2025 மே 19) கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஆரம்பித்ததுடன் அங்கு வரவேற்ப்பு உரையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
1948 பெப்ரவரி 18 இல் நிறுவப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பானது, உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பாகும், இது 140 உறுப்பு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் உலகளாவிய விளையாட்டு அமைப்பாகும்.
சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை கூட்டத்தில் மற்றும் மாநாட்டில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, 'விளையாட்டின் மூலம் நட்பு' என்ற உன்னத குறிக்கோளின் கீழ், 77 ஆண்டுகளாக 140 உறுப்பு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் உலக அமைதிக்கு அந்த அமைப்பு அளித்த தொடர்ச்சியான பங்களிப்பைப் பாராட்டினார். கடற்படைத் தளபதி மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த்துடன், விளையாட்டின் மூலம் நாடுகளுக்கிடையேயான பிணைப்புகளையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறினார். இலங்கை ஆயுதப்படைகள், தேசத்தின் பாதுகாவலராக ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், தேசிய மட்டத்திற்கு திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய கடற்படைத் தளபதி, சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பு இதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருவதாகவும் கூறினார். விளையாட்டின் மூலம் ராணுவ வீரர்களுக்கு வலுவான மன மற்றும் உடல் தகமைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், தலைமைத்துவ பண்புகள்,ஒழுக்கம், சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் தைரியம் போன்ற நேர்மறையான அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு பெரிதும் பங்களிக்கிறது என்று கூறினார்.
மேலும், இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் 80வது பொதுச் சபை கூட்டம் மற்றும் மாநாடு இன்று 2025 மே 19 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது.மேலும், இந்தப் பொதுச் சபைக் கூட்டத்துடன் இணைந்து நடைபெறும் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டக் கூட்டங்கள், 2025 மே 20 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெற உள்ளதுடன், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.