இலங்கை கடற்படையினர் 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடியதன் மூலம் கடற்படையின் சுழியோடி செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது
இலங்கை கடற்படையின் சுழியோடி திறன்களை விரிவுபடுத்தும் வகையில், திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள எலிபன்ட் தீவுக்கு அருகிலுள்ள ஆழ்கடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் மேற்பார்வையின் கீழ் 09 பேரை கொண்ட கடற்படை சுழியோடி குழுவானது 2025 மே 18 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடி வெற்றிகரமாக திரும்பினர்.
அதன்படி, கடற்படை சுழியோடிகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி நீருக்கடியில் சுவாசிக்கப் பயன்படுத்தப்படும் மூடிய சுற்றுகளைப் பயன்படுத்தி இந்த வரலாற்று சிறப்புமிக்க 100 மீட்டர் சுழியோடல் செயல்பாடானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டது, இதற்காக கடற்படையின் சுழியோடிகள் தாங்களாகவே பயிற்சிக்கான எரிவாயு மற்றும் எரிவாயு கலவை, சுழியோடி உபகரணங்களைத் தயாரிப்பதன் மூலம் கடற்படை சுழியோடிகளின் தொழில்நுட்ப திறன்கள் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
கடற்படையின் இந்த சாதனையின் மூலம், 100 மீட்டர் ஆழத்தில் கடல் தள தேடல் மற்றும் மீட்பு, கடலில் காணப்படும் மிதிவெடிகளை அகற்றுதல் மற்றும் நீரடி இடிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான நீருக்கடியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை கடற்படை கொண்டுள்ளதுடன் மேலும், ஆழ்கடலில் எந்தவொரு நடவடிக்கையையும் வெற்றிகரமாக நடத்தும் திறன்களைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள கடற்படைகளின் வரிசையில் இலங்கை கடற்படையும் இணைகிறது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, கடற்படை சுழியோடி மற்றும் மீட்புப் பிரிவின் அர்ப்பணிப்புடன் முதல் 100 மீட்டர் மூடிய சுற்று சுழியோட்டத்தை வெற்றிகரமாக முடித்தது இலங்கை கடற்படைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்றும், இது இலங்கை கடற்படையின் பெருமைமிக்க பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது என்றும் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, இந்த வெற்றி, சுழியோடி வீரர்களின் செயல்பாட்டுத் திறன்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கடற்படையின் செயல்பாட்டுத் திறனையும் விரிவுபடுத்துவதாகவும் நீண்ட காலமாக தொடர்ச்சியான பயிற்சி, தைரியம், திறமை மற்றும் உறுதியின் மூலம் அடையப்பட்ட இந்த வரலாற்று மற்றும் தனித்துவமான வெற்றி, பயிற்றுனர்கள், சுழியோடி வீரர்கள் மற்றும் இந்தப் பயணத்திற்கு அடித்தளமிட்டு வழிநடத்திய அனைத்து தொலைநோக்கு பார்வையாளர்களின் அசைக்க முடியாத தைரியம் மற்றும் அர்ப்பணிப்பால் அடையப்பட்ட வெற்றி இதுவாகும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா (ஓய்வு), துணைத் தலைமைத் தளபதியும் கிழக்கு கடற்படைத் கட்ளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, இயக்குநர் ஜெனரல் செயல்பாடு ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, சிரேஷ்ட சுழியோடி அதிகாரி மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்ட்ஸ், கடற்படை மற்றும் கடல்சார் கலையகத்தின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல், கொடி அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கனிஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.