திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் இலங்கை கடற்படை சமூக சுகாதார நிகழ்வொன்றை நடத்தியது
இலங்கை கடற்படையினர், திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து, தனிப்பட்ட சுகாதாரம், சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அடிப்படை அவசர சிகிச்சை ஆகிய துறைகளில் பாடசாலை மாணவர்களின் அறிவு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவது குறித்த சமூக சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை 2025 மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தினர்.
அதன்படி, திருகோணமலை பிரதேச மக்களிடையே பொது சுகாதார விழிப்புணர்வு மற்றும் அவசரகால சுகாதார அனர்த்த முகாமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையினால் நடத்தப்படும் கடற்படையின் சமூகப் பணித் திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சமூக சுகாதாரத் திட்டத்தின் மூலம், பாடசாலை மாணவர்களிடையே முறையான சுகாதாரப் பழக்கங்களை வளர்த்து, ஆரோக்கியமான மாணவ சமூகத்தை உருவாக்க கடற்படை எதிர்ப்பார்கிறது.