கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சங்கட்டேவ, தம்பெலஸ்ஸாகம, கோனபதிராவ, ததுசென்புர மற்றும் புளியங்குளம் ஆகிய கிராமங்களில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைக் கலை உதவியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 மே 16 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

மேலும், இந்த 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன், கடற்படை 1097 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்களுக்காக கையளித்துள்ளது, மேலும் ஒவ்வொரு நீர் சுத்திகரிப்பு நிலையமும் ஒரு நாளைக்கு சுமார் 10,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்ட 6 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் சங்கட்டேவ, தம்பெலஸ்ஸாகம, கோனபதிராவ, ததுசென்புர மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்' என்ற அரச சுகாதார தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கத்துடனும் சிறுநீரக நோய் தீவிரமடைவதை தடுப்பதன் நோக்கத்துடன் இலங்கை கடற்படை இந்த கடற்படை சமூகப் பராமரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.