சமய மரபுளுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படையினர் வெசாக் பண்டிகையை கொண்டாடினர்

2025 மே 12 ஆம் திகதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைமையில், இலங்கை கடற்படை, ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழா, கொழும்பு பௌத்தாலோக வெசாக் வலயம் மற்றும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் ஆகியவற்றிற்கு கடற்படையினர் பங்குபற்றினர்.

அதன்படி, நுவரெலியா அரச வெசாக் வலயம் மற்றும் கொழும்பு ஹுனுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு நடைபெறும் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில் வண்ணமயமான வெசாக் விளக்குகளை காட்சிப்படுத்துதல், விகாரையிற்கு முன்னால் உள்ள பேர ஏரி வளாகத்தில் படகுகளில் இருந்து பக்தி பாடல்களைப் பாடுதல் மற்றும் விளக்கு அலங்காரங்கள் ஆகியவற்றிற்கு கடற்படையானது பங்களிப்பு செய்தது.

மேலும், கடற்படை சேவா வனிதா பிரிவினால் 2025 மே 15 ஆம் திகதி சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் பௌத்த பக்தி பாடல் நிகழ்ச்சியானது நடைபெற்றது.