GALLE DIALOGUE 2025 அதிகாரப்பூர்வ வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது

‘Maritime outlook of the Indian ocean under changing dynamics’ என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த GALLE DIALOGUE 2025 சர்வதேச கடல்சார் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம், கடற்படைத் தளபதி அவர்களால் இன்று (2025 மே 15) கடற்படைத் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை கடற்படையால் 12வது முறையாக ஏற்பாடு செய்யப்படும் 2025 GALLE DIALOGUE சர்வதேச கடல்சார் மாநாடு, 2025 செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில்; பிராந்திய மற்றும் பிராந்தியம் சாராத இந்தியப் பெருங்கடலைப் பயன்படுத்தும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடல்சார் பங்குதாரர்கள், கடல்சார் நிபுணர்கள் மற்றும் கடற்படை மற்றும் கடலோர காவல்படைத் பிரதானிகள் உட்பட பல கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 'galledialogue.lk' என்ற இணைய முகவரியில் இந்த அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற முடியும்.