IMDEX Asia – 2025 இல் பங்கேற்ற சமுதுர கப்பல் தீவை வந்தடைந்தது
சிங்கப்பூரின் செங்கி (Changi) கண்காட்சி மையத்தில் 2025 மே 6 முதல் 8 வரை வெற்றிகரமாக நடைபெற்ற ‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இன்று (2025 மே 15) நாட்டை வந்தடைந்ததுடன் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரால் அந்தக் கப்பலுக்கு கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில், கடற்படைகள், கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனங்களின் இருபத்தி இரண்டு (22) பிரதானிகள் உட்பட 70 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டுடன் இணைந்து 2025 மே 07 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவுத்த இலங்கை கடற்படைத் தளபதி, முக்கியமான காலங்களில் பரஸ்பர ஆதரவு மற்றும் கூட்டு அணுகுமுறையில் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை பங்கேற்ற தரப்பினருக்கு வலியுறுத்தினார்.
மேலும், 'IMDEX Asia - 2025' சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் 13 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 போர்க்கப்பல்கள் பங்கேற்றன, மேலும் சமுதுர கப்பலின் அங்கத்துவ குழுவினர்களுக்கும் பிற தரப்பினர்களுக்கும் கடல்சார் மற்றும் வான் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் அதிநவீன உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகள், சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகள், அத்துடன் கடல்சார் மற்றும் வான் பாதுகாப்புத் துறையில் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர்.
மேலும், பிராந்திய மற்றும் பிராந்தியம் சாராத கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படையினர் உட்பட பல்வேறு கடல்சார் பங்குதாரர்கள் கலந்து கொண்ட ‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இலங்கை கடற்படை பிராந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் இணைந்து செயல்படக்கூடிய தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அமைப்புகள் குறித்த புதிய அறிவு, உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற பல நன்மைகள் இதன் மூலம் கிடைக்கப்பெற்றது.