உத்தியோகபூர்வ விஜயமாக தீவுக்கு வந்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ Nakatani Gen பாதுகாப்பு தலைமையகத்திற்கு வருகை தந்தார்
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ Nakatani Gen அவர்கள் உட்பட ஜப்பானிய பிரதிநிதிகள் குழு, உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2025 மே 04 ஆம் திகதி பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கடற்படைத் தளபதி மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்றார்கள்.
மேலும், இந்த விஜயத்துடன் இணைந்து, இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையில் இறந்த ஜப்பானிய பிரஜைகளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வில் ஜப்பானிய தூதுக்குழுவுடன் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் குழுவும் இணைந்துக் கொண்டனர்.