‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் இலங்கை கடற்படை பங்கேற்கிறது
‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி 2025 மே 06 அன்று சிங்கப்பூரில் உள்ள செங்கி கண்காட்சி மையத்தில் தொடங்கியதுடன். மூன்று நாள் கண்காட்சியின் தொடக்க நிகழ்வில், இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை கடற்படைக் கப்பலான சமுதுரவின் பணிக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும் தரப்பினருக்கு கடல்சார் மற்றும் வான் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் நவீன உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் முறைகள், கடல்சார் மற்றும் வான் பாதுகாப்புத் துறைகளில் அடையப்பட்ட நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காண ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில், கடற்படைகளின் தளபதிகள், கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனங்களின் இருபத்தி இரண்டு (22) தலைவர்கள் உட்பட 70 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தரப்பினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உரையாற்றிய இலங்கை கடற்படைத் தளபதி, நெருக்கடியான காலங்களில் பரஸ்பர ஆதரவு மற்றும் கூட்டு அணுகுமுறையில் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, தெளிவான நோக்கம், பரந்த புரிதல் மற்றும் வலுவான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதன் மூலம், பாதுகாப்பான கடல்சார் பிராந்தியத்தை வளர்ப்பதற்கு கடற்படை பங்களிக்க முடியும் என்று மேலும் வலியுறுத்தினார்.
மேலும், 'IMDEX Asia - 2025' சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் 13 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 போர்க்கப்பல்கள் பங்கேற்பதுடன், மேலும் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர, போர் கப்பல்களின் பங்கேற்புடன் நடைபெறும் பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க உள்ளது.