திருகோணமலையில் EOD & CBRNE பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
வெடிபொருள் அகற்றல் மற்றும் இரசாயின, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (Explosive Ordnance Disposal and Chemical, Biological, Radiological, Nuclear and Explosive - EOD & CBRNE) குறித்த 01/2025 பாடநெறி 2025 ஏப்ரல் 21 முதல் மே 01 வரை திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கடற்படை சிறப்பு நடவடிக்கைப் படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது, மேலும் சான்றிதழ் வழங்கும் விழா கிழக்கு கடற்படை கட்டளை துணைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.
மேலும், வெடிபொருட்களை அகற்றுதல் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் குறித்த அறிவு மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பாடநெறியில், கடற்படை சிறப்பு நடவடிக்கைப் படை அதிகாரிகள் இருபத்தி நான்கு (24) பேர் மற்றும் அமெரிக்க கடற்படையின் இந்தோ-பசிபிக் கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) உறுப்பினர்களும் பங்கேற்றனர்.