நீர்கொழும்பு களப்பில் "Operation Lion EYE" நதிக்கரை கடற்படை பயிற்சி
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட "Operation Lion EYE" நதிக்கரை பயிற்சி 2025 ஏப்ரல் 30 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒரு நாட்டின் கடற்படையின் பலம் கடலுக்கு மட்டுமல்ல, நாட்டின் உள்ளே நீர்வழிகளுக்கும் நீண்டுள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படை, மரைன் படை, புலனாய்வுப் பிரிவு மற்றும் நீர்கொழும்பு கடற்படைப் பிரிவு ஆகியவற்றின் பங்கேற்புடன் மேற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நதிக்கரை கடற்படைப் பயிற்சி, அத்தகைய நீர்வழிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தேவையான நடைமுறை உத்திகள் மற்றும் தந்திரோபாயங்கள் பற்றிய அறிவைப் புதுப்பித்து மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.