சமூக வலுவூட்டலுக்காக அடிப்படை சுழியோடி பயிற்சித் திட்டங்களை கடற்படை நடத்துகிறது

‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ் சமூக ரீதியாக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படை 2025 ஏப்ரல் 26 முதல் 28 வரை பேரிடர் மேலாண்மையில் சமூக தயார்நிலையை மேம்படுத்துவதற்கான மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

அதன்படி, இலங்கை கடற்படையின் நிபுணத்துவ பயிற்சியாளர்களின் கீழ் பேரிடர் மேலாண்மை குறித்து பேரிடர் பகுதிகளில் வசிக்கும் சமூகத்திற்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கும், அம்பாறை மாவட்ட செயலாளரின் வேண்டுகோளின் பேரில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவால் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, காரைத்தீவு மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களில் இருபத்தி மூன்று (23) பேர் பங்கேற்றனர்.

இந்த சுழியோடி பயிற்சித் திட்டத்தால், பேரிடர் ஏற்பட்டால் உடனடி மீட்பு திறனை வளர்த்தல், நீருக்கடியில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல், இயற்கை பேரழிவுகள் தொடர்பான சூழ்நிலைகளுக்கு சமூகத்தை கோட்பாட்டளவில் மற்றும் நடைமுறை ரீதியில் பயிற்றுவித்து விழிப்புணர்வு அளித்தல் ஆகியன இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.