அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூன்று பாடசாலைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்க கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு திட்டத்தின் பங்களிப்புடன் அம்பாறை மாவட்டத்தில் 03 பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 ஏப்ரல் 20, 22 மற்றும் 28 ஆகிய திகதிகளில் தென்கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது.
அதன்படி, 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி காரைதீவு, அம்பாறை, ஆர்.கே.எம் பெண்கள் பாடசாலை, 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி சாய்ந்தமருது, அம்பாறை, எம்.எச்.எம். அஷ்ரப் பாடசாலை மற்றும் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி காரைதீவு, அம்பாறை, அல் ஹுசைன் பாடசாலை ஆகியவை பாடசாலைகளை சுத்தம் செய்தல், தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கல்விக்கு உகந்த வளாகங்களாக மாற்றுவதற்காக அந்தப் பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து சமூகத்தை மேம்படுத்துவதற்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பானது நடத்தப்பட்டது.
மேலும் இவ் தேசிய திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், கடற்படை இதுவரை 42 பாடசாலை வளாகங்களை மாணவர்களின் கற்றலுக்கு உகந்த கவர்ச்சிகரமான வளாகங்களாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.