இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 257வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 419 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் செல்கின்றனர்.

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 257வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த இருநூற்று அறுபத்தாறு (266) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் நூற்று ஐம்பத்து மூன்று (153) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய நானூற்று பத்தொன்பது (419) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 ஏப்ரல் 29 அன்று புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் அழைப்பின் பேரில், கடற்படையின் பிரதிப் பிரதானியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.

சவாலான வாழ்க்கையைத் தேடும் நாட்டின் துடிப்பான மகன்கள் மற்றும் மகள்கள் இலங்கை கடற்படையில் சேர்ந்து பல்வேறு தொழில்முறை துறைகளில் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை கடற்படை வழங்கியுள்ளது. அதில் அதிகளவிலான நன்மைகளைப் பெற்ற மொத்தம் 419 பேரில் நிரந்தர பிரிவில் 224 பயிற்சி மாலுமிகளும் 42 பயிற்சி பெண் மாலுமிகளும் மற்றும் தன்னார்வப் பிரிவில் 13 பயிற்சி மாலுமிகளும் 138 பயிற்சி பெண் மாலுமிகளாக 257வது ஆட்சேர்ப்பின் கீழ் அடிப்படைப் பயிற்சிக்காக கடற்படை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒரு முதன்மையான பயிற்சி நிறுவனமான புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தில் இணைக்கப்பட்டனர்.

அடிப்படைப் பயிற்சியின் போது விசேட திறன்களை வெளிப்படுத்திய பயிற்சி பெற்ற மாலுமிகளுக்கு தலைமை விருந்தினர் கோப்பைகளை வழங்கினார். அதன்படி, அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 257வது ஆட்சேர்ப்பின் சிறந்த பயிற்சி மாலுமிக்கான கோப்பையை பயிற்சி பெண் மாலுமி டபிள்யூ.டி.எம். சில்வாவும் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற பயிற்சி மாலுமிக்கான கோப்பையை பயிற்சி மாலுமி எஸ்.எம்.ஆர்.கெ ஜயலத்தும் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை பயிற்சி மாலுமி எஸ்.பி. உமயங்கவும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான கோப்பையை பயிற்சி பெண் மாலுமி எச்.கே.யு மேகலாவினாலும் மேலும் சிறந்த துப்பாக்கி சுட்டு வீரருக்கான கோப்பையை பயிற்சி மாலுமி பி.எம்.எல். ஆகாஷ் ஆகியோரால் தன்வசபடுத்திக் கொள்ளப்பட்டதுடன் 257வது ஆட்சேர்ப்பின் சிறந்த பிரிவுக்கான கோப்பையை 'சயுர' பிரிவு வென்றது.

வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு உரையாற்றிய கடற்படையின் பிரதிப் பிரதானியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி சிந்தக குமாரசிங்க முதலில் வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் தெரிவித்த கருத்துக்களில், காலப்போக்கில் மாறிவரும் ஒரு தொழில்முறை கடற்படையில் தாய்நாட்டிற்கான தனித்துவமான பங்கை நிறைவேற்றுவதற்காக, வெளியேறிச் செல்லும் மாலுமிகளுக்கு கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஒதுக்கப்படும் என்றும், நாட்டின் வளர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாக மாறி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பெரும் பணியில் நேரடியாக பங்களிப்பதன் மூலம் தங்கள் பொறுப்புகளை நன்கு புரிந்துகொண்டு திறமையான, ஒழுக்கமான மாலுமிகளாக தாய்நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்க அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த கால போர்வீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து நிறுவிய அமைதியைப் பாதுகாக்கவும், நாட்டின் விரைவான வளர்ச்சிக்கான பணியைத் தோளில் சுமக்கவும், தங்கள் அன்பு மகன்கள்/மகள்கள் கடற்படையில் இணைக்க எடுத்த முடிவிற்கு இணங்க, அவர்களை ஊக்குவித்து, கடற்படைக்கு வழங்கிய, வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் அன்பான பெற்றோருக்கு கடற்படைத் தளபதிக்கு பதிலாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

ஒரு தீவு நாடான இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் தனித்துவமான பங்கை வகிக்கும் இலங்கை கடற்படை, பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல்களாகக் கருதப்படும் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம் பரந்த கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், மீன் வளங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் வளங்களையும் பாதுகாத்தல், பாதுகாப்பான வழிசெலுத்தலை உறுதி செய்தல் மற்றும் இலங்கை தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் விபத்திற்குள்ளான கடற்படை மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குதல் போன்ற கடமைகள் கடற்படைக்கு வளங்கப்பட்டுள்ளதாகவும். கடற்படையில் பயிற்சி மாலுமிகளாக சேரும் மாலுமிகள், தாய்நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் இருக்கும் இலங்கையின் பெருமைமிக்க மகன்கள் மற்றும் மகள்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் கூறினார். நாட்டிற்கு சேவை செய்வதற்காக தங்கள் அன்புக்குரிய மகன்கள் மற்றும் மகள்களை கடற்படையிடம் ஒப்படைத்த வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க தனது மரியாதையினை செலுத்தினார்.

வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பயிற்சி நிகழ்ச்சி, கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சி ஆகிய வண்ணமயமான காட்சிகளுடன் இந் நிகழ்வு நிறைவடைந்த்து.

மேலும், பயிற்சி இயக்குநர் ஜெனரல், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி மற்றும் கடற்படையின் கொடி அதிகாரி, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் பயிற்சி அதிகாரி உள்ளிட்ட கடற்படை தலைமையகம் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், விருந்தினர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.