“சிறி தலதா வந்தனத்தைத்” தொடர்ந்து க்லீன் ஶ்ரீ லங்கா செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி ஏரி சுத்திகரிப்பு திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு
2025 ஏப்ரல் 28 ஆம் திகதி தலதா வந்தனத்தின் பிறகு புனித வந்தனத்திற்காக வந்த பக்தர்களால் கண்டி ஏரி வளாகத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் திண்மக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்கும் நோக்கில்,கண்டி ஏரியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படை உதவியது.
அதன்படி, கண்டி ஏரியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிவதால் நீர் மூலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்க, க்லீன் ஶ்ரீ லங்கா செயலகம், நீர்ப்பாசனம் மற்றும் தொல்பொருள் திணைக்களம், பொதுமக்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் இந்த சமூக சேவை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு, "அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள்" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை மாற்றத்திற்கான க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தை நனவாக்க கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் இதுபோன்ற தேசிய திட்டங்களை மேலும் செயல்படுத்துவதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.