ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தலைவர் பங்கேற்றார்

கொழும்பு 05, ஜாவத்த கல்லறையில் 2025 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வருடாந்திர ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்.

ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், மேதகு போல் ஸ்டீவன்ஸ், நியூசிலாந்து உயர் ஸ்தானிகர், மேதகு டேவிட் பைன், இலங்கைக்கான அமெரிக்க தூதர் மேதகு ஜூலி சங்க் மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 25 அன்று கொண்டாடப்படும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தினமானது, முதல் உலகப் போரில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகளின் முதல் பெரிய இராணுவ ஈடுபாட்டை நினைவுகூருவதுடன், அன்றிலிருந்து போர் முயற்சியில் பணியாற்றி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த சிறப்பு நிகழ்வில் பல மதத் தலைவர்கள், இராஜதந்திர உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.