கடற்படை தளபதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி, அவ் நிறுவனத்தில் பயிற்சிப் பெறும் பயிற்சி மாலுமிகள், பயிற்சி ஆலோசனைப் பணிக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட,கனிஷ்ட மாலுமிகளுக்கு உரையாற்றினார். அப்போது, கடற்படைத் தளபதி, பயிற்சி பெறும் மாலுமிகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்களின் பொறுப்பை வலியுறுத்தியதுடன், பயிற்சி நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் திறம்படவும் மேற்கொள்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை கடற்படை தளபதி வழங்கினார்.
அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் கட்டளைத் தளபதியால், கடற்படைத் தளபதியை நிபுன நிறுவனத்திற்கு வரவேற்ற பிறகு, முதலில் பயிற்சி மாலுமிகளுடன் உரையாற்றிய கடற்படைத் தளபதி அதன் பின்னர் பயிற்சி ஆலோசனைக் குழுவினருடன் கலந்துரையாடினார்.
தேசிய பாதுகாப்பு என்ற முதன்மைப் பொறுப்பு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கடல்சார் இலட்சியத்தை அடைவதற்காக, அதற்கு ஒப்படைக்கப்பட்ட தனித்துவமான பொறுப்பை நிறைவேற்றுவதில் அனைவரும் தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று கடற்படை எதிர்பார்க்கிறது என்றும் கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்தார்.