தென்கிழக்கு கடற்படை கட்டளை பக்மஹா விழாவினை மிக விமர்சையாக நடாத்தினர்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக , 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தீகாயு ஆகிய நிறுவனங்களில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் நடைபெற்றது.
மேலும், பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டுகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் பாணம பகுதியில் உள்ள பொதுமக்களின் பங்கேற்புடன் கிரிக்கெட் மற்றும் கைப்பந்தாட்ட போட்டியை உள்ளடக்கிய புத்தாண்டு கொண்டாட்டங்களில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள், கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.