சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சூர்ய மங்கல்ய' என்ற விழாவானது 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நாட்டுப்புற விளையாட்டுகளுடன் நடைபெற்ற இந்த பக்மஹா விழாவில், தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மேலும், சூரிய மங்கல்ய நிகழ்வுடன் இணைந்து ஒரு இரவு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது, இது பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக இருந்தது.