சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் கிழக்கு கடற்படை கட்டளை சிறப்பு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தியது

கிழக்கு கடற்படை கட்டளையால் பாரம்பரிய புத்தாண்டு சடங்குகள் மற்றும் கலாச்சார கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் 'சூர்ய மங்கல்ய' என்ற பெயரில் , திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் 2025 ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெற்றது.

பாரம்பரிய புத்தாண்டு சடங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பக்மஹா விழாவில், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கடற்படை வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றனர்.