வடமேற்கு கடற்படை கட்டளையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்மஹா விழாவானது கொண்டாடப்பட்டது
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வடமேற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் நடைபெற்றது.
பாரம்பரிய புத்தாண்டு சடங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பக்மஹா விழாவில், பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.