கடற்படை தாதியர் கல்லூரியில் 2024 தாதியர் பயிற்சியை முடித்த 34 தாதியர் மாணவர்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு உறுதிமொழி வழங்கினர்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கூட்டு சுகாதார அறிவியல் பீடத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிறுவப்பட்ட கடற்படை தாதியர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பில் சேர்ந்த 34 இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தாதியர் மாணவர்களின் பதவியேற்பு விழா 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக் கேட்போர் கூடத்தில் கடற்படைத் தளபதியின் தலைமை அதகாரி ரியர் அத்மிரல் டேமியன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, 24 கடற்படை தாதியர் மாணவர்களுக்கும், 04 இராணுவ தாதியர் மாணவர்களுக்கும், 06 விமானப்படை தாதியர் மாணவர்களுக்கும் மூன்று முனை விளக்குகளை வழங்கி, பெண் தாதியர் மாணவர்களுக்கு கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் தலைக்கவசங்களை வழங்கி வைத்தனர். மேலும், தாதியர் பாடநெறியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 12 தாதியர் மாணவர்களுக்கு பாடத் திறன் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் துணைப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் லால் பனாபிட்டிய, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தாதியர் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குழு இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.