கடற்படை மூலம் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

“கிளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படை 2025 ஏப்ரல் 05 முதல் 07 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

அதன்படி, அம்பாறை மாவட்டச் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, அனர்த்த நிவாரணம் குறித்து பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும், கடற்படையின் துரித நடவடிக்கைப் படையணியால் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கார்த்திவ் மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பத்தைந்து (35) பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.

அவசரநிலை ஏற்பட்டால் சமூக மீள்தன்மையை வளர்ப்பது, தயார்நிலையை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தம் ஏற்பட்டால் சமூகத்தின் எதிர்வினையை உறுதி செய்வது ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு அனர்த்த ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள், அனர்த்தம் ஏற்பட்ட இடத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல் மற்றும் அனர்த்த நிவாரணம் தொடர்பாக சிவில் நிறுவனங்களுடன் சரியான ஒருங்கிணைப்பு குறித்து சமூகத்திற்கு கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் கல்வி கற்பித்து அதிகாரம் அளித்தது.