இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் 'INS SAHYADRI' இன்று (2025 ஏப்ரல் 07) தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

மேலும், இந்தக் கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்தவும், தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்றதுடன், இலங்கை கடற்படை வீரர்களுக்கும் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.