கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது
அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹீனுக்கிரிய மற்றும் நாவக்குளம ஸ்ரீ போத்திருக்கராம விகாரஸ்தான வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த 1089 மற்றும் 1090 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாளொன்றுக்கு 10000 லீட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் ஹினுக்கிரிய மற்றும் நாவக்குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் பெருமளவிலான மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.