இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் நாகதீப புராண ரஜ மகா விகாரையில் சமய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன

யாழ்ப்பாணம், நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையின் முன்னாள் விகாராதிபதியான பிராமணவத்தே தம்மகித்தி திஸ்ஸ நாஹிமி அவர்களின் நினைவு தினத்தையும், நாகதீப புராண ரஜ மகா விகாரையின் விகாராதிபதியான உத்தர லங்காவே பிரதான சங்கநாயக நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாஹிமியின் அறுபத்து நான்காவது (64வது) பிறந்த நாளை முன்னிட்டும் சமய நிகழ்ச்சிகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, நாகதீப புராண ரஜ மகா விகாராதிபதி, உத்தர லங்காவே பிரதான சங்கநாயக நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாஹிமி அவர்களினதும் கடற்படைத் தளபதியினதும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் திகதி இரவு சமுதுர தர்மபிரசங்கத்தை நடத்திய பின்னர், 2025 ஏப்ரல் 02 அன்று வடக்கு கட்டளை தளபதியின் மேற்பார்வையில், 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி மதியம் 40 பிக்குகளுக்கு அன்னதானம் மற்றும் பிரிகர பூஜை ஆகியன நடாத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வுடன் நைனாதீவு மக்களுக்கு மதிய உணவை தயாரிப்பதற்கும் கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்.