ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான கடற்படைக்காக, கடற்படையானது மற்றொரு மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் புதிய பரிமாணங்களில் ஒன்றாக, கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளரின் முழு மேற்பார்வையின் கீழ், சிவனொலிபாத மலையை ஆராயும் நிகழ்ச்சி 2025 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குறித்த பணிக்குழுவின் 34 கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ், சுற்றாடலுக்கு ஏற்ற பழக்கவழக்கங்களை சமூகத்தில் ஊக்குவித்தல் மற்றும் சூழலியல் நெறிமுறைகளை வளர்ப்பது ஆகிய முக்கிய நோக்கங்களுடன், கடற்படையினரின் பூரண பங்களிப்புடன் சிவனொலிபாத மலையைச் சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, கடற்படையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் வலுவான மற்றும் ஆரோக்கியமான கடற்படையை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில், தூய்மையான சூழல் மற்றும் தூய்மையான இலங்கைக்கான கடற்படையின் உறுதியான அர்ப்பணிப்பு இதன் மூலம் நிரூபிக்கப்படுகின்றது.