கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படை சங்கத்தின் கௌரவ தலைவர் சந்தித்தார்
இலங்கை கடற்படை சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைச் சங்கத்தின் கௌரவ தலைவர் 2025 ஏப்ரல் 02 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படை சங்கத்தின் கெளரவத் தலைவர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் கடற்படை சங்கத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைச் சங்கத்தின் கௌரவத் தலைவர் கடற்படைத் தளபதிக்கு பரிசில் ஒன்றை வழங்கி வைத்தார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் கடற்படை சங்கத்தின் கௌரவ உப தலைவர், பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.