கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலயம் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கான கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு
"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 18 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
"அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள்" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக மாற்றும் "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் பணிக்குழுவில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாகும்.
குறித்த தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, தனிப்பட்ட மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைக்கும் பாடசாலைகளில்; சுத்தமான, அன்பான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான, ஒழுக்கமான ,திறமையான, மற்றும் உற்சாகமான பாடசாலை சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, தீவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முதல் கட்டத்தின் கீழ், கடற்படையினர் 38 பாடசாலை வளாகங்களை மாணவர்களுக்கான கற்றல் நட்பு வளாகங்களாக மாற்றியமைத்தனர்.
அதன்படி, கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தை மாணவர்களின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலாக மாற்றுவதற்குத் தேவையான கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்பானது மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நடைப்பெற்றது.