கடற்படையினால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஆதரவு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், திருகோணமலையில் 2025 மார்ச் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்குக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு சமூக பணி பங்களிப்பை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை, திருகோணமலை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், பிரதேசத்தின் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் காண கடற்படை சமூக பணி திட்டத்தில் பங்களித்ததுடன், டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு கடற்படையினரும் மக்களை விழிப்புணர்வூட்டினர்.