36வது கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைப்பெற்றது
திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் நடைபெற்ற 36 ஆவது கனிஷ்ட கடற்படைப் பணியாளர் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன் அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் மற்றும் கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2025 மார்ச் 22 அன்று கடல் மற்றும் கடல்சார் கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கடற்படையின் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு தேவையான மூலோபாய முடிவுகளை எடுப்பதில் பொறுப்பேற்கக்கூடிய கனிஷ்ட அதிகாரிகளை அறிவார்ந்த தலைவர்களாக வடிவமைக்கும் நோக்கத்துடன் கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறி ஆண்டுதோறும் கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடநெறியில் இந்திய கடற்படையின் ஒரு அதிகாரி (01), இலங்கை விமானப்படையின் ஒரு அதிகாரி (01) மற்றும் கடற்படையின் பதினெட்டு (18) அதிகாரிகள் உட்பட இருபது (20) மாணவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சான்றிதழ் வழங்கும் விழாவில் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் அதிகாரிக்கான விருது லெப்டினன்ட் கமாண்டர் (ஆயுத) எல்சிஏ பெரேராவுக்கும், சிறந்த பேச்சாளர் விருது லெப்டினன்ட் கமாண்டர் (ஏஎஸ்டபிள்யூபி) ஈஏஐகே பிரியதர்ஷனாவுக்கும், ஆய்வறிக்கையை வழங்கிய சிறந்த மாணவர் அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் (மரைன்) டபிள்யூஎச்எம் கருணாரத்ன அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச மாணவர் அதிகாரி விருதை இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் சுனில் ஜோஷியும் பெற்றார்.
விருதுகளை வழங்கியதன் பின்னர், வைபவத்தில் உரையாற்றிய கடற்படை தளபதி அவர்கள் 36 ஆவது கனிஷ்ட கடற்படைப் பணியாளர் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ அதிகாரிகளை பாராட்டியதுடன், பாடநெறியை வெற்றிகரமாக முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சி ஆலோசகர்களையும் பாராட்டினார்.
மேலும், இந் நிகழ்வில் கடற்படை தலைமையக மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடல் மற்றும் கடல்சார் கலைக்கழத்தின் பயிற்சி கெப்டன், கெப்டன் சாலிய பரணகம, 36 வது கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறியின் பயிற்சி ஆலோசகர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.