ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer வகைக்கு சொந்தமான ‘MURASAME’என்ற கப்பலானது 151 மீற்றர் நீளமும், மொத்தம் 200 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் HAYAKAWA Masahiro பணியாற்றுகிறார்.
மேலும், இந்த போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்த பின்னர் ‘MURASAME’ கப்பல் 2025 மார்ச் 23 ஆம் திகதி அன்று கப்பலானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.