சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 19வது பாடநெறியின் மாணவச் சிப்பாய் அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷாந்த ஹெவகே தலைமையில் 19 ஆவது பணியாளர் பாடநெறியைச் சேர்ந்த 190 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவச் சிப்பாய் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று மேற்கு கடற்படை கட்டளையின் ஆய்வு விஜயத்தில் 2025 மார்ச் 17 அன்று ஈடப்பட்டதுடன், மேலும் இந்த குழுவினரை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு அந்த கட்டளையின் செயல்பாட்டு பணிக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

இந்த ஆய்வு பயணத்தின் போது, மேற்கு கடற்படை கட்டளையின் பணி மற்றும் துறைமுக பாதுகாப்பு குறித்து கட்டளை அதிகாரி இல்லத்தில் மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பின்னர், கொழும்பு துறைமுகத்தில் உள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் படகுகளின் செயல்பாடுகளையும் அவதானித்தனர்.

மேலும், சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.