பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'PROVENCE' என்ற கப்பல் தீவை விட்டு வெளியேறியது

2025 மார்ச் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த பிரான்சிய கடற்படையின் ‘PROVENCE’ என்ற கப்பல் 2025 மார்ச் 19 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கொழும்பு துறைமுகதில் கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.

மேலும், 'PROVENCE' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில் அதன் அனைத்து நிர்வாகக் குழுவினரும் பல பகுதிகளுக்கு சென்று தீவின் முக்கிய இடங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படையினருக்கான விழிப்புணர்வு செயலமர்வும் கப்பலில் நடைபெற்றது.