பிரான்ஸின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

பிரான்ஸின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி (French Joint Forces Commander in the Indian Ocean) Rear Admiral Hugues LAINE உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 மார்ச் 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.

அதன்படி , இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இந்நியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகளில் கடற்படையின் பங்கு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கடற்படைத் தளபதி மற்றும் இந்தியப் பெருங்கடல் கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், இந்த நிகழ்வினை நினைவு கூறம் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசில்களும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.