“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் நோக்கம் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம்
“அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள்” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக மாற்றியமைக்கும் "க்லீன் ஶ்ரீ லங்கா " தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றடன்துடன்,இது தொடர்பாக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம் 2025 மார்ச் 17 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் ஆரம்பிக்கப்பட்டது.
"அழகான நாடு - புன்னகைக்கும் மக்கள் " என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதன் மூலம்; வறுமையை ஒழித்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கி, முழு நிறைவான வாழ்க்கை – வசதியான நாடு ,கௌரவமான வாழ்க்கை- பாதுகாப்பான நாடு , நவீன வாழ்க்கை-செல்வம் கொழிக்கும் நாடு, அபிமானமிக்க வாழ்க்கை- நிலைதளராத நாடு என்ற நாட்டைக் கட்டியெழுப்ப மும்முனை அணுகுமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம் க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையை சமூக, சூழலியல் மற்றும் நெறிமுறை ரீதியில் மாற்றியமைத்து மீட்டெடுப்பதில் கடற்படையின் பங்கு, பொறுப்பு, சவால்கள் மற்றும் அந்த சவால்களை வெற்றிகொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், விரிவான சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை மாற்றத்தின் மூலம் இலங்கையை மீட்டெடுப்பதில், முதலில் ஒவ்வொரு நபரின் அறிவு, அணுகுமுறை, திறன்கள், நடத்தை மற்றும் வாழ்க்கை முறை எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பதும், மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு நபரின் நடத்தை எவ்வாறு தனிப்பட்ட முறையில், நிறுவன ரீதியாக மற்றும் சமூக ரீதியாக எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 2025 மார்ச் 17 அன்று இலங்கை கடற்படை கப்பல் உத்தர மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் கப்பல்கள் மற்றும் படகுகளை உள்ளடக்கியதாகவும், 2025 மார்ச் 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண, கஞ்சதேவ மற்றும் கோடைம்பர ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட்டது. மேலும், இன்று (2025 மார்ச் 19) முதல் 2025 மார்ச் 21வரை, இலங்கை கடற்படைக் கப்பல்களான எலார, அக்போ, வசப மற்றும் கடற்படை நிலைபடுத்தல் வெத்தலகேணி நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது, மேலும் கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், " க்லீன் ஶ்ரீ லங்கா " தேசிய திட்டத்தின் கீழ், "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" மற்றும் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை " என்ற கருப்பொருளின் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளை கவர்ச்சிகரமான முறையில் மீட்டெடுக்கவும், பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கவும், மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான, ஒழுக்கமான மற்றும் உற்சாகமான திறன்மிக்க பாடசாலை சமூகத்தை உருவாக்க நடத்தப்படுகின்ற பாடசாலை வளாக மறுசீரமைப்பு திட்டங்களுக்கு கடற்படை தொடர்ந்து சமூக ஆதரவை வழங்கி வருகிறது.