நிகழ்வு-செய்தி
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையின் பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்தது
கடற்படையினரின் பங்களிப்புடன் கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பெருமளவான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ லூர்து ஆனந்தன் அவர்கள் (Rt. Revd. Dr. Lourdu Ananthan. Bishop of Sivagangai diocese, India) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ பீ.ஜே. ஜெபரத்னம் அவர்கள் (Very Revd. Fr. P. J. Jebaratnam, Vicar General, Jaffna Diocese) இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள பாரிஷ் கௌரவ ஆயர் அசோக் அவர்கள் (Revd. Fr. Ashok, Parish Priest, Rameswaram, India) மற்றும் நெடுந்தீவு திருச்சபை ஆயர் அருட்தந்தை பி.பத்திநாதன் அவர்கள் (Revd. Fr. P. Pathinathan. Parish Priest, Delft) ஆகியோரின் வழிகாட்டலில், யாழ் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பர்நாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. மருதலிங்கம் பிறதீபனின் (Maruthalingam Piiratheepan) ஆகியோரின் ஏற்பாட்டிலும், இலங்கை கடற்படையின் முழுமையான உழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வள பங்களிப்புடன், வெற்றிகரமாக நடைபெற்றது.
17 Mar 2025
ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தணி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தணி இலங்கை கடற்படையில் 34 வருடத்திற்கும் அதிகமான சேவை காலத்தை நிறைவு செய்து இன்று (2025 மார்ச் 17) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
17 Mar 2025


